சென்னை வியாசர்பாடியில் போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கே.கே.நகர் பகுதியில் போதை ஊசி விற்கக்கூடிய கும்பல் அட்டகாசத்தின் காரணமாக சிறுவன் ஒருவன் கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது போதை பொருட்கள் பயன்பாடு காரணமாக மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி எம்.எம்.காலனி பகுதியை சேர்ந்த தாமோதரன் ஷகிலா தம்பதியின் ஒரே மகன் தீபக் இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு வெளியேறி மெக்கானிக் கடையில் பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சரியாக 3 மணி அளவில் மைதானத்தில் என்னால் நிற்க முடியவில்லை எனவும் தன்னை உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என தீபக் அவரது நண்பர்களுக்கு செல்போனில் அழைத்துள்ளளார். இதனை தொடர்ந்து அவருடைய நண்பர்கள் வந்து பார்த்த போது தீபக் மயக்க நிலையில் இருந்த்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதித்த போது அவர் போதை ஊசி பயன்படுத்தி கொண்டதால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட போது அவருடைய வீட்டில் போதை ஊசிகள் இருப்பதை கண்டெடுக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings