புனே:
கடந்த 25-ம் தேதி அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண், சதாரா செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர், எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார்.
அந்த பெண், சதாரா மாவட்டத்தின் சுல்தானுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பால்தான் செல்லும் பேருந்து மற்றொரு நடைமேடையில் நிற்பதாகக் கூறிய மர்ம நபர், இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத நடைமேடையில் நின்றிருந்த குளிர்சாதன பேருந்தில் இளம்பெண்,ஏறி அமர்ந்ததும் பின்னால் சென்ற மர்ம நபர், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இதன்பிறகு இளம்பெண் சொந்த ஊருக்குத் திரும்பினார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தோழியிடம் அவர் கைப்பேசியில் கூறினார். தோழியின் அறிவுரைப்படி சில மணி நேரங்களுக்குப் பிறகு இளம்பெண் புணே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் ஸ்மார்டனா பாட்டீல் கூறியதாவது: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், முகக்கவும் அணிந்துள்ளார். சிசிடிவி கேமராக்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து மர்ம நபரைக் கண்டுபிடித்துவிட்டோம். ராம்தாஸ் கடே (36) என்ற அந்த நபர் மீது திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடத்துநர் போன்று அவர் நடித்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தப்பியோடிய ராம்தாஸ் கடேவை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். குளிர்சாதன பேருந்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு துணை ஆணையர் ஸ்மார்டனா பாட்டீல் தெரிவித்தார்.


GIPHY App Key not set. Please check settings