
சென்னை:
வேலூரைச் சேர்ந்த (23 வயது) பெண் ஒருவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பெரம்பூரைச் சேர்ந்த பெண் தோழி (27 வயது) நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் இரண்டு அறைகளை பதிவு செய்துவிட்டு, மது அருந்த அழைத்துள்ளார். அதன் பேரில், வேலூர் பெண் லாட்ஜூக்கு சென்று, பெண் தோழியுடன் மது அருந்தியுள்ளார். அந்த பெண் தோழி, அவருக்கு தெரிந்த இரண்டு ஆண் நண்பர்களை அறைக்கு வரவழைத்துள்ளார். நான்கு பேரும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் அங்கேயே மது மயக்கத்தில் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வேலூர் பெண் கண் விழித்து எழுந்து பார்த்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல்துறையினர் வழக்குப் பதிந்து பெண் தோழி, அவரது ஆண் நண்பர் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடைத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings