
சென்னை:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மல்சிங் (வயது 23). சென்னை ஏழுகிணறு பகுதியில் தங்கி, ஒரு பொம்மை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் இரவு வேலை முடித்து, தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் நிர்மல்சிங்கை கத்தி முனையில் மிரட்டி, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள ஒரு பழைய கட்டிடத்துக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கி, பின்னர் அவர் வைத்திருந்த செல்போனிலிருந்து ஜிபே மூலம் ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். இதையடுத்து, அவரை அங்கேயே கட்டிப்போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். இதுகுறித்து நிர்மல்சிங் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படியில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதில், பொம்மை வியாபாரியை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டது மூன்று சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கலை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings