தமிழகத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. இவை சாலைகளில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றன. சாலையில் உள்ள மிச்சம் மீதி, காய்ந்துபோன எலும்புகள், சாலையில் தூக்கி வீசப்படும் பழைய உணவுகள் ஆகியவற்றை சாப்பிட்டுக்கொண்டு சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அவ்வப்போது சிறுவர், சிறுமிகள், வயதானவர்களை பாய்ந்து கடித்து துன்புறுத்தும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் சர்வசாதாரணமான மாறிவிடுகிறது. நடவடிக்கை எடுப்பது கிடையாது.
நாய் கடித்தால் ஏற்படும் ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு சுமார் 55,000 பேர் இறக்கின்றனர், கேப்னோசைட்டோபாகா கேனிமோர்சஸ், எம்ஆர்எஸ்ஏ , டெட்டானஸ் மற்றும் பாஸ்டுரெல்லா போன்ற நோய்களும் நாயால் கடித்த ஒருவருக்கு பரவும். பெர்கெயெல்லா ஜூஹெல்கம் என்பது நாய் கடித்தால் பரவும் நோய்த்தொற்று ஆகும். நாய் கடித்தால் பி. ஜூஹெல்கம் தொற்று பாக்டீரியாவுக்கு வழிவகுக்கும்.
நாய்களுக்கு கருத்தடை செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கருத்தடைகளும் செய்வது கிடையாது. நோய் தடுப்பு ஊசிகளும் போடப்படுவது கிடையாது. பெயரளவிற்கே இவை நடப்பதாக பொதுமக்களே கூறுகின்றனர். சாலைகளில் சுற்றிதிதிரியும் நாய்கள் சொறி, சிரங்கு ஏற்பட்டு நாக்கால் நக்கிக்கொண்டு செல்கிறது. இவை நம்மிடம் வரும்போது நமக்கு சில தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் இந்த வகை நாய்கள் கடித்தால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.
பொதுவாக நாய்கள் துரத்தினால் நாம் பயந்து ஓடுகிறோம். ஆனால் அவ்வாறு ஓடக்கூடாது. அதே இடத்தில் தைரியமாக நிற்க வேண்டும். நாய் தாக்குதல்களில் நாக்-டவுன்கள் மற்றும் கீறல்கள் அடங்கும். சில நாய் கடிகளால் காயம் ஏற்படாவிட்டாலும் , அவை தொற்று , சிதைவு , தற்காலிக அல்லது நிரந்தர இயலாமை அல்லது மரணத்தை விளைவிக்கலாம்.
நாய் கடியின் மற்றொரு வகை “மென்மையான கடி” என்பது நன்கு பயிற்சி பெற்ற நாய்கள், நாய்க்குட்டிகள் மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத விளையாட்டில் காட்டப்படும். நாய் சண்டையின் போது, தவறான சிகிச்சைக்கு பதில், பயிற்சி பெற்ற நாய்கள் காவலர், போலீஸ் அல்லது இராணுவ விலங்குகள் அல்லது சீரற்ற சந்திப்பின் போது நாய் கடித்தால் ஏற்படலாம்.
சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நாய்களுக்கு முறையான நோய் தடுப்பு ஊசிகள் போடப்பட வேண்டும். இவைகள் நடக்கிறதா? என்பது நமக்கு புரியாத ஒன்றுதான். மனிதாபிமான அடிப்படையில் இதன் முக்கியத்துவம் கருதி தீவிர நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings