கோவை:
கோவை மதுக்கரை போலீஸார், பாலத்துறை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
சோதனையின்போது, அவர்கள் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருள்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் (28)), நபில்(30), கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(30), அப்துல்நாசர்(36), ஷாஜகான்(28), சாதிக் பாஷா(29) ஆகியோர் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ 45 கிராம் கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம், கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



GIPHY App Key not set. Please check settings