பரமக்குடி :
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியைச் சேர்ந்தவர் சரவணன், 31,. வாய் பேச இயலாதவர். இவர் பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரம் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நென்மேனியை சேர்ந்த சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.



GIPHY App Key not set. Please check settings