
சென்னை:
அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரை சேர்ந்தவர் சரவணன் (43வயது). தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். முகநூலில் ஸ்மிரிதி ஷர்மா என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். அவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு, ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார். இதை நம்பி, 14 தவணைகளாக மொத்தம் ரூ.10.55 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகாரில் தெருவித்துள்ளார். மேற்கு மண்டல சைபர் கிரைம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரெங்கநாதன் (26வயது) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings