
சென்னை:
புளியந்தோப்பு, பட்டாளம், மசூதி தெருவில் தோல் வியாபாரி நியாமத்துல்லா (வயது 44) வசித்து வருகிறார். இவர் அதிகாலை வியாபாரத்துக்கு செல்ல வீட்டுக்கு வெளியே வந்தபோது, அவரது வீட்டுக்கு எதிரே வசிக்கும் ஷேக் உஸ்மான் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை ஒருவர் உடைத்து திருட முயன்று கொண்டிருந்தார். இதனை கவனித்த நியாமத்துல்லா, இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஷேக் உஸ்மானை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து புளியந்தோப்பு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று பிடிபட்ட நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்டவர் புளியந்தோப்பு, திருவிக நகரைச் சேர்ந்த சம்சுதீன் (வயது 18) ஏற்கெனவே புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட மூன்று குற்ற வழக்குகள் உள்ளது என்பதை காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings