
சென்னை:
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (8 வயது) சிறுமி ஒருவர் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தாயார் இல்லை. தந்தையும், தாத்தாவும் வளர்த்து வருகின்றனர். சிறுமி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார். தாத்தாவும், தந்தையும் சிறுமியை சுமார் மூன்று மணி நேரமாக தேடியும் சிறுமியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஒருவரது வீட்டில் சிறுமி மயக்க நிலையில் இருப்பதை அறிந்து அங்கு சென்று சிறுமியின் தந்தை, மகளை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றச்சாட்டி உதவி ஆய்வாளர் வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திர்க்கு சென்று இருதரப்பையும் சமாதானம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பாதிப்புக்கு உள்ளான சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் தனக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings