
திண்டுக்கல்:
பழனி அருகே உள்ள சித்தரேவுக் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்ற கூலித்தொழிலாளி, கடந்த வாரம் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் முத்து கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். முத்து வீட்டின் அருகே குழி தோண்டப்பட்ட தடயம் இருப்பதாக உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, முத்துவின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் முத்து கொலை செய்யப்பட்டு, அவரது உடல் புதைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் முத்துவின் மனைவியின் சகோதரர் மற்றும் மூன்றாம் பாலினத்தவரான வைஷ்ணவி, கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. அவருடைய கைப்பேசியும் தொடர்புக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதால், காவல்துறையினர் தற்போது வைஷ்ணவியை முக்கிய குற்றவாளியாக கருதி தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings