மதுரை:
மதுரை மத்திய சிறையில் உதவி சிறைக்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் பாலகுருசாமி. இவர் சிறை கைதி ஒருவரின் மகளுக்கு காவல்துறை தேர்வில் உதவி செய்வதாக கூறி தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.
இதன்மூலம் அவருடன் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், கைதியின் மகள் மற்றும் பேத்திக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து பாலகுருசாமியை ஆரப்பாளையம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு வரவழைத்து கைதியின் மகள் உறவினர்களுடன் இணைந்து காவலரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் பாலகுருசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், மதுரை மாநகர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாலகுருசாமியை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.




GIPHY App Key not set. Please check settings