
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த (26 வயது) இளம் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு குழந்தைகள் இல்லை. உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டுக்கு வந்தார். உறவினர்கள் ஆலோசனையின் பேரில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு அந்தப் பெண் சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன்(வயது 43) என்பவர், பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், மகளை மட்டும் ஜெபம் செய்ய அனுப்பியுள்ளனர். அப்போது போதகர் ரெஜிமோன், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் போதகரின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். இது தொடர்பாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி, போதகர் ரெஜிமோனை கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். போதகர் ரெஜிமோன் மீது மேலும் பல பாலியல் புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings