நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அந்த, அந்த காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பல்வேறு நபர்கள் கொடுத்த புகார்களுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரூபாய் 15,52,500/- மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செல்போன்களின் உரிமையாளர்களை வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா திரு ஹர்ஷ் சிங், இ,கா,ப அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். மேலும் பொது மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்கள்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களை வரவழைத்து ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளா திரு ஹர்ஷ் சிங், இ,கா,ப

GIPHY App Key not set. Please check settings