
நாமக்கல்:
ராசிபுரம் அருகே உள்ள கருப்பன் சோலை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மகன் பாலாஜி. இவருக்கு (வயது46). விவசாயியான இவர், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார். அந்த பணத்தில் ரூ. 2.5 லட்சத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு அருகிலுள்ள மருந்து கடைக்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்க சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர், அவருடைய வாகனத்தில் வைத்து இருந்த அந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். மீண்டும் வந்து தனது இருசக்கர வாகனத்தை பார்த்தபோது, பணம் இல்லாதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தம்மம்பட்டி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை (வயது31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.2.5 லட்சம் பணத்தை பத்திரமாக மீட்டனர். துரையின் நண்பர் அன்பு என்பவர் தலைமறைவாக உள்ளதால், அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings