கரூர்:
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ரமேஷ் (வயது 41) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அம்சா (வயது 35). இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் மதுரையை சேர்ந்த சிவக்குமார் (வயது 35) என்பவர் வாடகைக்கு குடி இருக்கிறார். சிவக்குமாருக்கும், அம்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்த உறவு நீடித்து வந்திருக்கிறது. சம்பவத்தன்று இரவு, ரமேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அம்சாவுடன் சிவக்குமார் தனிமையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ரமேஷ், சிவக்குமாரிடம் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சிவக்குமாரை பலமாக தாக்கினார். கம்பியால் தாக்கியதில், தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து, கரூர் சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி நேரில் பார்த்த கணவன்..!! கள்ளக்காதலன் கொலை?



GIPHY App Key not set. Please check settings