விழுப்புரம் :
விழுப்புரம் அருகே கணவர் கள்ளத்தொடர்பைக் கைவிட மறுத்ததால், மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென்று ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடல் மீது ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.உடனே பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்திக் காப்பாற்றினர். தொடர்ந்து விசாரணையில், விழுப்புரம் அருகே தாண்டவமூர்த்திக்குப்பத்தை சேர்ந்த குமாரவேல் மனைவி சுதா (34) என்பது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கூறும்போது, ‘எங்களுக்குக் கடந்த 20022ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இளம்பெண் பிரசவத்துக்காக வந்துள்ளார்.அவருடன் எனது கணவருக்குக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு என்னுடன் சரிவரப் பேசாமல் என்னையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் விசாரணை செய்யாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வருகின்றனர்.இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார். பின்னர் போலீசார் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி மனு அளிக்குமாறு தெரிவித்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சுதா மனு அளித்துவிட்டுச் சென்றார். இச்சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.


GIPHY App Key not set. Please check settings