
தருமபுரி:
மதிகோண்பாளையத்தை அடுத்த குண்டலப்பட்டியில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ரமேஷ்குமார் (32வயது) தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மகாலட்சுமி (28வயது) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையிலும் கிடந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்ட ரமேஷ்குமார், மகாலட்சுமிக்கு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரமேஷ்குமார், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ரமேஷ்குமாரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடத்தவும், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய் சாந்தியை நேரில் பார்க்கவும் கடந்த 23ஆம் தேதி ரமேஷ்குமார் பரோலில் வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் வந்த ரமேஷ்குமார், மனைவி மகாலட்சுமியுடன் குண்டலப்பட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். ரமேஷ்குமார் சிறையில் இருந்தபோது, மனைவி மகாலட்சுமி அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரமேஷ்குமார் மகாலட்சுமியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மகாலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, ரமேஷ்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
GIPHY App Key not set. Please check settings