சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 100க்கும் மேற்பட்ட தனியார் லாட்ஜ்கள் உள்ளன. தற்பொழுது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை கூட லாட்ஜாக மாற்றி காசு பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 18 வயது மதிக்கத்தக்க மாணவியை அழைத்துக் கொண்டு இளைஞர் அந்த குறிப்பிட்ட லாட்ஜிக்கு வந்துள்ளார்.
அறைக்கு சென்ற சில நேரத்தில் மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட குடியிருப்பு வாசிகள் உடனடியாக கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அந்த லாட்ஜிக்கு வந்து குறிப்பிட்ட அறையை சோதனையிட்டு மாணவியையும், இளைஞரையும் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியில் தற்போது வீடுகளை லாட்ஜ்களாக மாற்றி வருமானம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதனால் சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. எனவே கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களை முறைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings