
கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் (25வயது) இளைஞர், ஒருவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிக்கும் பெற்றோர்களே குழந்தை திருமணம் செய்துவைத்துள்ளனர். அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவி, வழக்கம்போல், பள்ளிக்கு சென்றுள்ளார். கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வந்த மாணவியை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். தனக்கு திருமணம் ஆனதாக மாணவி கூறியிள்ளார்.
ஆசிரியர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியதில் பெற்றோர்களே குழந்தைக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் மணமகன், அவரது பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings