
சென்னை:
நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த பிரசாத் என்பவரிடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான பணப்பரிவர்த்தனை கூகுள் பே மூலம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்து. இந்த போதைப்பொருள் வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது திரையுலகைச் சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

GIPHY App Key not set. Please check settings