புதுச்சேரி:
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தனியார் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பள்ளியை அடித்து நொறுக்கிச் சூறையாடினர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ளது தனியார் ஆங்கில மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர் மணிகண்டன், 6 வயதான மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெற்றோர் பரிசோதித்தபோது, பாலியல் தொல்லைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். தகவல் அறிந்த பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள், இன்று பள்ளியை அடித்து நொறுக்கிச் சூறையாடினர்.பள்ளிக்கு வெளியே, தவளங்குப்பம் சந்திப்பில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கடலூர் சாலையில் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

GIPHY App Key not set. Please check settings