குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கம்பி சோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை பண்ணைத்தோட்டத்தில், நேற்று முன்தினம் தேயிலை பறிக்க 6 தொழிலாளர்கள் சென்றனர். அப்போது தேயிலை எடை போடும் இரும்பு கம்பியில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் நிர்வாணத்துடன் வாலிபர் உடல் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் அருவங்காடு போலீசார் விரைந்து சென்று மோப்பநாய் உதவியுடன் விசாரித்தனர். அப்போது அருகில் கிடந்த அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை எடுத்துப் பார்த்தனர்.
அதில், லஷாசுரன் (39), ஜார்கண்ட் மாநிலம் என்ற முகவரி இருந்தது. அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், லஷாசூரன் ஒரு பெண்ணுடன் தேயிலைத் தோட்டத்திற்கு வந்தது தெரியவந்தது. அந்த பெண் யார்?, எங்கு வசித்து வந்தார்? எதற்காகத் தேயிலை பண்ணைத்தோட்டத்துக்கு வந்தார்? லஷாசுரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



GIPHY App Key not set. Please check settings