காவல்துறை என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான துறை. மக்களை பாதுகாப்பது. நாட்டை பாதுகாப்பது. ராணுவத்திற்கு அடுத்தபடியாக காவல்துறையை கூறும் அளவிற்கு மிகவும் முக்கியமான துறை. இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் காவல்துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக பணியில் உள்ள காவல்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு செய்ய வேண்டிய கடமையையே முறையாக செய்ய முடியாத நிலைமை ஏற்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவித்தன. சில காவலர்கள் தொடர்ச்சியான மரணத்தை தொடர்ந்து காவலர்களின் இந்த மன அழுத்தத்தை போக்க பல்பேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இது வெறும் கண்துடைப்பாக மட்டுமே அமைந்துள்ளது. தற்போது பழைய குருடி கதவை திறடி என்கிற பழமொழிக்கேற்ப மீடும் விசுவரூம் எடுக்கத் தொடங்கிவிட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் பணியாற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட காவல்துறையினருக்கு பணிச்சுமை இன்றளவும் அதிகமாக இருக்கிறதே தவிர குறையவில்லை என்பது ஏட்டில் எழுதப்படாத உண்மை. ஒவ்வொரு அலுவலகத்திலும் 8 மணி நேர வேலை என்பதுதான் அடிப்படை. இதில் உணவு இடைவேளையும் அடங்கும். இதேபோல் காவல்துறையில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 1 முதல் 9 மணி வரையும் என்பது பணி வரன்முறை ஆனால் காவலர்களுக்கு கூடுதலாக பணி நேரம் வழங்க உத்தரவு பாய்கிறது. உணவு இடைவேளை கூட சிறிது நேரம் மட்டுமே. பெண்களுக்கு இரவு நேர பணியும் வழங்கப்படுகிறது. கட்சி மீட்டிங், போராட்டக்களம், வன்முறை, தொடர் போராட்டங்களில் பணியாற்றும் போலீசாருக்கு எப்போது உணவு கிடைக்கும், ஓய்வு கிடைக்கும் என்று கூறவே முடியாது. சில நேரங்களில் தூக்கமின்றி 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டிய அவலமும் ஏற்படும். இதில் பெண் போலீசாரும் சிக்கி சின்னாபின்னமாவதை காண முடிகிறது.
அதே நேரத்தில் காவல்துறையில் பணியாற்றும் சாதாரண காவலர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விடுமுறை என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது வேதனையான விஷயம். இரவில் பணியாற்றும் பெண் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பெண் போலீசாருக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. ஆண் காவலர்கள் முறை தவறும் செயலும் நடந்தேறுகிறுவதாக காவல் துறையில் பணியாற்றம் சிலரின் வேதனை குரலாகவே உள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை வழியாக தாலுகா காவலர்கள் பணியாற்றுகிறார்கள். ஆயுதப்படை என்பது மிகவும் முக்கியமானபடை. தேவைப்படும்போது ராணுவத்திற்கே இவர்களை உபயோகிக்கலாம். ஆனால் திறமை இல்லாதவர்களை ஆயுதப்படைக்கு எடுக்கும் செயலும் அறங்கேறி வருகிறரது. திறமையான காவலர்கள் அட்லி என்கிற முறையில் காவல் உயர் அதிகாரிகள் வீட்டு வேலைக்கு செல்பவர்களாகவும், கார் ஓட்டுனர்களாகவும் மாற்றப்படுகிறார்கள். திறமையற்றவர்கள் காவல்நிலையங்களில் பணியாற்றும் அவலம் நடக்கிறது. காவலர்களாக பயிற்சி பெறுபவர்கள் ஏன் டிரைவர்களாக பணியாற்ற வேண்டும். அதற்காக காவலர் அல்லாதவர்களை டிரைவர்களாக நியமிக்கலாமே என்பதும் காவலர்களின் வேதனை பதிவாக உள்ளது.
GIPHY App Key not set. Please check settings