
சென்னை:
பழவந்தாங்கல் அருகே உள்ள பி.வி.நகர் முத்தையா தெருவைச் சேர்ந்தவர் பவானி (வயது 55). பூங்காவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், பவானி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனர். ஆனால், அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், பறிக்க முடியவில்லை. உடனே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து பவானி, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் காவலர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்டது பம்மல் காமராஜபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 22), அவரது மனைவி மரிய சுமித்ரா (வயது 24) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கவால்துரையினர் இருவரையும் கைது செய்து. இருவருக்கும் வேறு எந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings