
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் (16 வயது) மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் (16 வயது) மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது மாணவியின் கர்ப்பத்துக்கு அவளுடன் படிக்கும் சக மாணவன்தான் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings