உத்திரபிரதேஷ்:
கான்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுசில் – மனிஷா தம்பதி, இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் இருந்துள்ளனர். கடந்த ஒருவருடத்திற்கு முன்பு இரண்டு வயது மகள் மற்றும் ஒரு வயது மகன் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. தற்போது (4 வயது) மகன் மட்டுமே இருந்துள்ளார். மனிஷாவுக்கும் விகாஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது கள்ளக்காதலுடன் சென்ற மனிஷா, தனது குடும்பத்தினரின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மீண்டும் கணவரிடம் திரும்பியுள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலனை மறக்க இயலாமல் தவித்த மனிஷா அதற்கு இடையூறாக இருக்கும் மகனை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். தனது திட்டப்படி மகனின் முகத்தில் கொடூரமாக கடித்து வைத்து சைக்கோ போல கழுத்தை நெரித்துக் கொன்ற தாய். இதையடுத்து, மகனை தேடிய தந்தை, வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த தனது தந்தைக்கு அருகில் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மனிஷாவிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. இதையடுத்து, மனிஷா மற்றும் விகாசை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்காதலுக்காக பெற்ற மகனை கொலை செய்த காம கொலைக்காரி கைது..

GIPHY App Key not set. Please check settings