
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியைச் சேர்ந்த சாமுவேல் அந்தோணிராஜ் (54வயது). சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்து வருகிறார். அவர் கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்த போது ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுவன் தனது நண்பர்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணி ராஜை தாக்கி, அவரது செல்போனை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்ததாள் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பர்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணி ராஜை தாக்கியது தெரிய வந்தது. காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின்பேரில், தெர்மல் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் உசேன் (20வயது) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறார்களைத் தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings