
தூத்துக்குடி:
ஆந்திர மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடிபோதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண் மற்றும் இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த தனலட்சுமி, மதுரையை சேர்ந்த முருகன் என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை தூத்துக்குடிக்கு கடத்தியது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து மொத்தம் 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
GIPHY App Key not set. Please check settings