
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் (24வயது)வயது இளம்பெண். தனது கணவருடன் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வேலை பிடிக்காததால், குடும்பத்துடன் மீண்டும் சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என ரயில் ஏறுவதற்காக திருப்பூர் ரயில் நிலையம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது, பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரும் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி அந்த பெண்னையும், கணவரையும், குழந்தையையும் அவர்களோடு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்குவதற்காக மூன்று வாலிபர்கள் தாங்கள் தங்கியிருந்த அறையை கொடுத்துள்ளனர். ஆறு பேரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். அந்த பெண்ணின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு கணவன் மற்றும் குழந்தையின் கண் முன்னே கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை மூன்று பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
GIPHY App Key not set. Please check settings