
சென்னை:
சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு பழவந்தாங்கலிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் இடத்தில் இருட்டான பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் அவரிடம் செயின் பறித்ததாகவும், கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை முயற்சி செய்ததும் பெண் காவலரிடம் விசாரணையில் தெரியவந்தது. மறைந்திருந்த மர்ம வாலிபர் பெண் காவலரின் வாயை பொத்தி அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு பாலியல் வன்கொடுமை முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings