
நாமக்கல்:
திருச்செங்கோட்டை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன் சரவணபெருமாள். தமிழ்செல்வி என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சரவணபெருமாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாநதால். மாமியாரை தீர்த்துக்கட்டி சொத்து முழுவதையும் அனுபவிக்க திட்டமிட்டு வந்துள்ளார் தமிழ்செல்வி. மக்களை தேடி மருத்துவ திட்டதின் மூலம் வருவதாக கூறி தனது வீட்டுக்கு வந்த செவிலியர் கொடுத்த ஊக்க மருந்தை தனலட்சுமி குடித்ததால் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனலட்சுமிக்கு பரிசோதனை செய்த நிலையில், ‘எனர்ஜி டிரிங்’ என கூறி கூல்டிரிங்சில் விஷம் கலந்தது கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மகனின் திருமணத்தை பிடிக்காத தனலட்சுமி அதனை பயன்படுத்திக் கொண்டு தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் வேறு திருமணம் செய்து வைக்கிறேன், தனது சொத்தில் பங்கும் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். மாமியார் தங்களை பிரிக்க நினைப்பது குறித்து தமிழ்ச்செல்வி தனது தாய் பாப்பாத்தி இடம் தெரிவித்திருக்கிறார். தனலட்சுமி இறந்துவிட்டால் சொத்து தானாகவே தனது கணவருக்கு வந்து விடும் என்பதால் அவரை கொலை செய்ய தாயும் மகளும் திட்டமிட்டு. இதன் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் செவிலியர் பணியாற்றிய கோமதியை பயன்படுத்தி தமிழ்செல்வி, மற்றும் தாயார் இருவரும் தனலட்சுமிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்தது கொடுத்தனர். விசாரணையில் சம்மந்தப்பட்ட மூவரையும் கைதுசெய்து மேல்நடவடிக்கை தொடர்கிறது.
GIPHY App Key not set. Please check settings