
திருநெல்வேலி:
காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலன் காதலி இருவரும் திருமணம் செய்த்க்கொண்டார்கள் இந்நிலையில் இருவீட்டு பெற்றோர்களின் எதிர்ப்பை எதிர்க்கொள்ள முடியாததால் புதுமண தம்பதி பரிதாப இறப்பு. பாளையங்கோட்டை பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள வாடைகை வீட்டில் புதுமண தம்பதி புதியதாக குடிபுகுந்தனர். திருமணம் ஆகி இரண்டு நாட்கல் ஆன நிலையில் வாடகை வீட்டிற்கு குடிபுகுந்த புதுமண தம்பதிகல் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் தூக்கிட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட புதுமண தம்பதிகல், சென்னை ராயபுரத்தைச்சேர்ந்த விஜயன் (வயது 26), சென்னை திருவொற்றியூர்ச்சேர்ந்த பவித்ரா (24வயது) என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறினர் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பெற்றோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings