
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த மருதுார் லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
செல்வராஜ் தற்போது தனது குடும்பத்துடன் திருவாரூர் மாவட்டம் மாந்தை பகுதியில் வசித்து வந்தார். கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தவர் 21ம் தேதி இரவு முதல் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி சாந்தி செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீஸார் பல இடங்களில் தேடிவந்த நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி காலை மேலபாதி காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து மிதந்து வந்தை கண்டனர்.
தகவலறிந்த செம்பனார் கோவில் போலீசார், ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் இறந்தவர் செல்வராஜ்தானா என்று அவரது குடும்பத்திடம் காண்பித்தனர். ஒரு வழியாக குடும்பத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில் இறந்தவர் செல்வராஜ் என முழுமையாக ஏற்காமல் குடும்பத்தினர் உடலை பெற்றுச் சென்றனர். இறுதி சடங்குகளுக்கு பின் உடல் தகனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த செல்வராஜ் வேலை கிடைக்காததால் அங்கு சில நாட்கள் தங்கி விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார். அவரைக் கண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியுடன் கூடிய பீதியடைந்தனர்.
உடனடியாக செம்பனார்கோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட லையில் அவர்கள் செல்வராஜை வந்து பார்த்தனர். அப்படி என்றால் இறந்தவர் யார்? எப்படி தவறு நடந்தது? என்கிற கேள்வி எழுந்தது.
போலீசரின் அலட்சியத்தால் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

GIPHY App Key not set. Please check settings