in ,

சொத்திற்காக சகோதரர்களை கொன்ற சகோதரி

விசாகப்பட்டினம்
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா என்ற மகன்களும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர்.

ஆசிரியர் போலராஜு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். பணியின் போதே உயிரிழந்த காரணத்தால் ஆசிரியர் போலராஜு குடும்பத்திற்கு 70 லட்சம் பணம் அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. அதாவது பிஎப் பணம், அரசின் நிவாரணம், ஓய்வூதிய பலன் ஆகியவை போலராஜு குடும்பத்திற்கு கிடைத்ததால் மொத்தம் 70 லட்சம் பணம் கிடைக்க உள்ளது. இவருக்கு சொந்த வீடு ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் வீடு மற்றும் 70 லட்சம் பணம், அரசு வேலை ஆகியவற்றை பெறுவதில் 2 மகன்கள் கோபி, ராமகிருஷ்ணா மற்றும் மகள் கிருஷ்ணவேணி இடையே போட்டி ஏற்பட்டது.
மூத்த மகன் கோபி போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கிருஷ்ணவேணியும் அவரது தம்பி ராமகிருஷ்ணாவும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்ததால் 3பேரும் தந்தையின் வேலைக்கு போட்டி போட்டதுடன், பணத்தையும் பெற துடித்தனர்.
கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காணாமல் போனார்கள். கிருஷ்ணவேணியை பிடித்து போலீசார் விசாரித்த போது, அண்ணன் தம்பி இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
காவலர் கோபிகிருஷ்ணாவிடம் கடைசியாக பேசியது கிருஷ்ணவேணி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே கிருஷ்ணவேணியிடம் அடிக்கடி பேசி வந்த தன்னையா என்ற இளைஞரை பிடித்து விசாரித்தபோது, தான் கிருஷ்ணவேணியின் காதலன் என்றும், தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உளறியுள்ளார்.
இதனிடையே கிருஷ்ணவேணியை பிடித்து விசாரித்த போது, பணத்திற்காக நவம்பர் 26 ஆம் தேதி தனது தம்பியையும், டிசம்பர் 10 ஆம் தேதி தனது மூத்த சகோதரனையும் கொன்றதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
விசாரணையில் காதலனுடன் இணைந்து இந்த சதியை அரங்கேற்றியுள்ளார்.தனது இன்ஸ்டாகிராமில் பழகும் 17 வயது சிறுவர்கள் 4 பேரை ஏவி விட்டு அண்ணன் தம்பிகளை கொன்றுள்ளார்.
அவர்களது உடல்களை கால்வாயில் வீசியுள்ளனர். அதனை போலீசார் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கிருஷ்ணவேணியை கைது செய்தனர். மேலும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காதல் தொல்லை… மாணவி தற்கொலை முயற்சி… போக்சோவில் வாலிபல் சிறையில் அடைப்பு

சிறுவனுக்கு பாலியல்தொல்லை… முதியவருக்கு 20 ஆண்டு சிறை