கடலூரில் +1 மாணவிக்கு வாலிபர் காதல் தொல்லை கொடுத்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயன். அதே ஊர் அரசங்குட்டை தெருவில் 16 வயது பிளஸ் 1 மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வாலிபர் விஜயன் மாணவியை காதலிப்பதாக கூறிக்கொண்டு தினமும் மாணவி பள்ளிக்கு செல்லும் போது பின்தொடர்ந்து சென்றுள்ளார். இது மாணவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிகிறது.
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த மாணவி, தன்னை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்று வாலிபர் விஜயனை எச்சரித்தும் உள்ளார்.
ஆனாலும் அந்த வாலிபர் பின்தொடர்ந்து வந்ததால் தன்னார் படிக்க முடியவில்லையே என்று மனம் உடைந்த மாணவி எலி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிசிச்சை பெற்ற மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியை பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்த வாலிபர் மீது மாணவியின் பெற்றோர் ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் ராபின்சன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செயது வாலிபர் விஜயனை கைது செய்து நீதிமன்ற ஆஜருக்கு பின் சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings