in , ,

திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் கோவில் நகைகள் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஆதிஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
இந்த கோவிலில் பெருமாள் மற்றும் அம்பாள் சன்னதிகளில் தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும் நகைகள் கடந்த வாரம் கணக்கிடும்போது பெட்டகத்தில் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுதொடர்பாக பெட்டகத்தை வைத்திருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் தேவஸ்தானத்தின் திவான் பழனிவேல் பாண்டியன் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் பதில் எதுவும் அளிக்காததால் பழனிவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் நகைகள் மாயமான தகவல் பக்தர்களுக்கு தெரியவந்ததை அடுத்து ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

காதல் தொல்லை… மாணவி தற்கொலை முயற்சி… போக்சோவில் வாலிபல் சிறையில் அடைப்பு