சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) ஜான் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவர் மடிப்பாக்கத்தில் தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தற்போது மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
அண்மையில் மருத்துவ விடுப்பை நீட்டிக்கும்படி கடிதமும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேலையூர் எஸ்எஸ்ஐ ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் கிடத்தது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ், சேலையூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டவர். இவர் ஏற்கனவே ஒரு முறை திருச்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ள ஜான் செல்வராஜ், தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ள நிலையில் சட்டவிரோதமாக வங்கதேச எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எதற்காக அவர் வங்கதேச எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
GIPHY App Key not set. Please check settings