கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது.
கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நான்கு நிதிநிறுவனங்களில் கடந்த மாதம் போலி நகை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த லால் கிங்சிலி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலி நகை அடகு வைத்து பணம் பெற்று மோசடி ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த தொடர்பாக கொல்லங்கோடு போலீசார், கேரளா மாநிலம் பீமாபள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருவனந்தபுரம் பீமாபள்ளி அருகே பூந்துறை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த அல் அமீன் (36) என்கிற ஆட்டோ டிரைவரை தனிப்படை போலீசார் பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings