திருப்பூரில் போலீஸ்காரரை பயங்கரமாக தாக்கியவருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருப்பூர் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் வேல் (வயது 38). தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு அனுப்பார்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி இரவு சக்தி தியேட்டர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார், செந்தில்குமார் ஆகிய இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் தகராறு செய்துகொண்டிருந்தனர்.
இதனை குமரவேல் விசாரித்தபோது அவரை கட்டையால் கடுமையாக தாக்கினர். இதுதொடர்பாக குமார், செந்தில்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கில் முதன்மை உதவி அமர்வு நீதிபதி பா.செல்லதுரை தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில் குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 2 ஆயிரம் ரூபாய் கட்டத்தவறினால் கூடுதாலாக 6 மாதம் கடுங்காவல் சிறைதண்டனை விதித்தும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான செந்தில்குமார் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



GIPHY App Key not set. Please check settings