சென்னை சென்ட்ரலில் 4 வது பிளாட்பார்மில் ஹௌராவிலிருந்து வந்த சூப்பர் பாஸ்ட் ரயிலில் இருந்து வந்த பயணிகளிடம் வழக்கம் போல சோதனை நடத்தினர், அப்போது ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே ,அவரை சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்தை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர், விசாரணையில் அவரது பெயர் ராஜு வயது 28 தகப்பனார் பெயர் ராசையா எனவும் மாமூடு ஜங்ஷன், வாத்தியார் விளை கிருஷ்ணன்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் எனத் தெரிய வந்தது.
ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் முதல் நிலை காவலர் பிரகாசம் மற்றும் காவலர் வெங்கடேசன் ஆகியோர் குற்றவாளியை கைது செய்து பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings