
பாட்னா
பிகார் மாநிலத்தின் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால் (வயது 50) எனும் நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். அப்போது, அவரது மாமா மற்றும் அவரது சகோதரர்கள் 4 பேர் சேர்ந்து நாதுனியின் நிலத்துக்காக அவரைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி மற்றொரு உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடந்ர்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது பாலின் உடல் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, கொலையாளிகள் எனக் குற்றம்சாட்டப்பட்ட பாலின் நான்கு தந்தைவழி உறவினர்களான ரதி பால், விமலேஷ் பால், பகவான் பால் மற்றும் சத்யேந்திர பால் ஆகிய 4 பேர் கைது
செய்யப்பட்டனர்.
4 பேரும் 2 ஆண்டுகள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது.இதில் தற்போது அவரது மாமா உயிரிழந்துவிட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் வழக்கு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜான்சியில் வீதி ஒன்றில் ஆதரவற்று திரிந்த ஒருவரை காவல்துறையினர் விசாரித்ததில் பீகார் காவல் நிலையத்தில் இறந்த நபராக பதிவு செய்யப்பட்டவர் நாதுனி என்பது தெரியவந்தது. இது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது பெற்றோர் அவர் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டனர். அவரது மனைவியும் நீண்ட காலத்திற்கு முன்பே அவரை விட்டுச் சென்றுள்ளார். பீகார் வீட்டிற்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது என்று அவர் காவல்துறையிடம் கூறினார்.
போலீசார் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் , கொலை செய்யப்பட்ட நபர் திரும்பி வந்தது கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings