
சென்னை:
சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யபிரியா. கல்லூரி மாணவியான இவரை கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற வாலிபர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்தார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணையில் சத்யபிரியாவும், சதீஷும் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாக அப்போது கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சதீஷ் கடந்த 27ஆம் தேதி அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை குற்றவாளி என அறிவித்தார்.
குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 30ஆம் தேதி வழங்கப்படும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், இன்று (30-12-24) தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இளம்பெண் கொலை வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்தும், பெண்ணை சித்ரவதை செய்தது தொடர்பான வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டைனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings