
தர்மபுரி:
மணலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி கவுரம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தம்பதியர் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 2.3 ஏக்கர் நிலம் இருக்கிறது. சொத்தில் தனக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்துக்கொடுக்குமாறு இரண்டாவது மகன் சின்னசாமி பெற்றோரை துன்புறுத்தியுள்ளார். சொத்தை பிரித்துக்கொடுக்க முடியாது என்று கூறியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சின்னசாமி, நண்பர்களை வரவழைத்து தாயையும், தந்தையும் சரமாரியாக தாக்கினர். இதில் தந்தை பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சின்னசாமி, சீனிவாசன், ஆகாஷ் மூன்று போரையும் காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

GIPHY App Key not set. Please check settings