
தேனி:
சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பாளையங்கோட்டை சேர்ந்த விக்னேஷ் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் இருக்கும் கழிப்பறைக்கு சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் மாணவர்கள் விடுதி காப்பாளர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குஉடற்கூக்குறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விக்னேஷின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் எனவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


GIPHY App Key not set. Please check settings