தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் லோகநாதன் (வயது 24). காரிமங்கலம் அருகே பொம்மனஹள்ளியில் பேக்கரி மாஸ்டராக வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவர் மறுநாள் காலையில் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள மின்விசிறியில் லோகநாதன் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தியதில் லோகநாதன் திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

GIPHY App Key not set. Please check settings