தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65).தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று பழனியம்மாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது பழைய இரும்புபெட்டியில் வைத்திருந்த இரட்டை பதக்க தங்க சங்கிலி 6 பவுன், தங்க சங்கிலி 1 பவுன் என மொத்தம் 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 15 ஆயிரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


GIPHY App Key not set. Please check settings