
சேலம்:
கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(65வயது). இவரின் மனைவி இந்திரா(60வயது) அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டடு, நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பலமுறை பாலகிருஷ்ணன் கண்டித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் இருந்த பாலகிருஷ்ணன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி இந்திராவை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமான அதே தெருவில் வசித்து வரும் கலா என்பவரின் வீட்டின் மேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்து மக்கள் தீயை அனைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்திராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings