
புதுக்கோட்டை:
மண்டையூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஜீவிதா சித்திரகுமார். இவர்களுக்கு மணிகண்டன்(18வயது) மகனும், பவித்ரா (16வயதில்) என்ற மகளும் உள்ளனர். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பவித்ரா இரவு செல்போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்துருக்கிறார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்து இருக்கிறார்கள். 11 மணிக்கு மேலும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த செல்போனை பறித்து, தூங்க செல்லுமாறு மணிகண்டன் கூறிவுள்ளார். போனை திருப்பிக்கேட்டு அண்ணனிடம் சண்டை போட்டுள்ளார் பவித்ரா. இந்த சண்டையில் மணிகண்டன் செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டார். செல்போன் தன்னுடைய கண்ணெதிரே உடையைந்ததை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். இதில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டே, வீட்டுக்கு பக்கத்திலிருந்த கிணற்றில் குதித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தன்னுடைய தங்கையை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றில் குதித்தார். அண்ணன், தங்கை இருவருமே நீரில் தத்தளிக்க துவங்கினார்கள். சிறிது நேரத்தில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, பவித்ரா, மணிகண்டன் இருவரையும் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings