
சென்னை:
அபிராமபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பொறியாளராக பணி புரிந்து ஒய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது எதிர் முனையில் பேசிய நபர் தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். உங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் கோடி கணக்கில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. எனவே இது தொடர்பாக மும்பை சைபர் க்ரைம் காவல்துறையினர் உங்களிடம் விசாரணை செய்வார்கள் எனக் கூறி இணைப்பை, மற்றொருவருக்கு ப்பார்வேர்டு செய்துள்ளார். எதிர்முனையில் காவல் துறை அதிகாரி போன்று ஒருவர் பேசியுள்ளார். அவர் சமூக வலைதள ஆப் ஒன்றை செல்போனில் பதிவிறக்கம் செய்யவைத்துள்ளார். வீடியோ காலில் காவலர் போன்று சீருடை அணிந்துகொண்டு. நீங்கள் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்து கோடிக்கணக்கான பணத்தை குவித்துள்ளிர்கள். உங்களை அழைத்துச் செல்ல மும்பை காவல்துறையினர் சென்னை வர உள்ளனர். கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வையுங்கள். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது குற்றம் இல்லை என்றால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்குக்கு அனைத்து பணங்களையும் அனுப்பி விடுகிறோம் என தெரிவித்துள்ளார்கல். இதையடுத்து மூதாட்டி தனது நேர்மையை நிருபிக்க அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ 4.67 கோடி அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு எதிர்முனையில் பேசிய நபர்களை தொடர்புக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலக்த்தில் புகார் தெரிவித்தார். காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஏழ்மையில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து அவர்களது வங்கி எண்களை பெற்று மோசடி பணத்தை அனுப்பிவைத்து பின் அந்த பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.
GIPHY App Key not set. Please check settings